search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதல்"

    • நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.
    • ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 36). டிரைவர். இவரது 3 வயது மகன் ரித்தீஸ்.

    இந்த நிலையில் நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது.

    லாரி கோவிலை வந்தடைந்ததும் முன் பின் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கருணாகரன் என்பவர் சென்றார். அப்போது அங்கு ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.லாரி தண்ணீர் மூலம் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி திடீரென எதிர்பாராத விதமாக தானாகவே நகர்ந்து முன்னோக்கி சென்றது. அப்போது ரோட்டோ ரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரித்தீஸ் மீது லாரி மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவன் ரித்தீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த தீபாஸ்ரீ (15) என்ற சிறுமி காயம் அடைந்தார். மற்ற சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இதைகண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் ரித்திசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவலை அறிந்ததும் லாரி டிரைவர் கருணாகரன் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த கருணாகரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். 

    ஜோலார்பேட்டை பைக் மீது லாரி மோதிய விபத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலியானார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் செந்தில்குமார் (42), ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர். இவரது மனைவி ஷாலினி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் ஹயாத் நகரில் வசித்து வந்தார். நேற்று இரவு பைக்கில் திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார்.

    அன்னாண்டபட்டி கூட்ரோடு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. லாரி டயர்கள் ஏறியதில் செந்தில்குமார் 2 கால்களும் நசுங்கியது.

    லாரியை நிறுத்திய டிரைவர் தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் செந்தில்குமாரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்தார்.

    இதுதொடர்பாக, ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×